சுவிஸில் இருந்து யாழ்ப்பாணம் வந்தவர் உயிரிழப்பு
-யாழ் நிருபர்-
சுவிட்சர்லாந்தில் இருந்து நேற்று முன் தினம் திங்கட்கிழமை யாழ்ப்பாணம் வந்தவர் குளியலறையில் விழுந்து உயிரிழந்துள்ளார்.
பாலசிங்கம் உதயகுமார் (வயது – 55) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
குறித்த நபர் நேற்றைய முன் தினம் சுவிஸில் இருந்து நவாலி தெற்கு, மானிப்பாய் பகுதியில் உள்ள தாயாரின் வீட்டுக்கு வந்திருந்தார். இந்நிலையில் நேற்று செவ்வாய் கிழமை காலை குளியலறையில் குளிக்கச் சென்றவேளை கீழே விழுந்து உயிரிழந்துள்ளார்.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.
உடற்கூற்று பரிசோதனைக்காக சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் கொண்டு செல்லப்பட்டுள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்