சுவிட்சர்லாந்தில் மண்சரிவில் சிக்கி மூவர் காணாமல் போயுள்ளனர் : ஒருவர் மீட்பு
சுவிட்சர்லாந்தின் பலபகுதிகளில் நேற்று வெள்ளிக்கிழமை முதல் பெய்துவரும் கனமழை காரணமாக ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி மூவர் காணாமல் போயுள்ளதுடன் , ஒருவர் மீட்கப்பட்டுள்ளார். கனமழையினால் பலபகுதிகள் பலத்த சேதமடைந்துள்ளதாகவும் தெரியவருகின்றது.
வெள்ளிக்கிழமை மாலை கிராபண்டன் மாநிலத்தில் ஏற்பட்ட இடியுடன் கூடிய கனமழை காரணமாக ஏற்பட்ட மண்சரிவில் சிக்குண்டு நால்வர் காணாமல் போயிருந்த நிலையில் , பெண் ஒருவர் ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
பாதிப்புக்கு உள்ளான பகுதிகளில் மீட்புப் படையினர் ஹெலிகாப்டர்கள் மற்றும் ட்ரோன்கள் உதவியுடன் காணாமல் போனயுள்ள ஏனைய மூன்று நபர்களைத் தேடும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர்.
இந்த மண்சரிவு காரணமாக சுமார் 2கிலோமீற்றர் சுற்றுவட்டாரத்தில் உள்ள பல சொத்துகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை சுவிட்சர்லாந்தின் மிகமுக்கியமான சுற்றுலாத்தளமான வலேமாநிலத்தின் சேர்மாத் உட்பட பலபகுதிகள் கனமழை மற்றும் வேகமாக பனிஉருகியமையினால் ஏற்பட்ட திடீர் நீர்மட்ட உயர்வினால் கடுமையான பாதிப்புகளுக்கு உள்ளாகியுள்ளன.
இப்பகுதிகளில் உள்ள நீர்நிலைகளை அண்டியுள்ள மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் , சிலபகுதிகள் மக்கள் நடமாட்டத்திற்கு தற்காலிகமாக தடைசெய்யப்பட்டுள்ளன.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்