சுவிட்சர்லாந்தில் மணிக்கு 181 கிமீ வேகத்தில் வாகனத்தை செலுத்தியவரின் உரிமம் உட்பட வாகனமும் பறிமுதல்

சுவிட்சர்லாந்தின் வாட் மாநிலத்தில் மணிக்கு 181 கிமீ வேகத்தில் வாகனத்தை செலுத்திய குற்றத்தை அடுத்து , இளைஞன் ஓட்டுனர் உரிமம் பறிமுதல் செய்யப்பட்டதுடன், வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஏப்ரல் 4ஆம் திகதி வியாழன் இரவு 8:30 மணியளவில் வாட் மாகாணத்தில் வசிக்கும் 21 வயதான வாகன ஓட்டுனர் ஏ1 நெடுஞ்சாலையில், டன்னல் டெஸ் விக்னெஸில், அவென்ச்சிலிருந்து மர்டென் நோக்கிச் மணிக்கு 181 கிமீ வேகத்தில் வாகனத்தை செலுத்திய நிலையில் இவர் மீது குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

குறித்த வீதியில் மணிக்கு 100 கிமீ என வரை வரையறுக்கப்பட்ட நிலையில் , இவர் மணிக்கு 181 கிமீ வேகத்தில் வாகனத்தை செலுத்தியுள்ளமை வேகக் கட்டுப்பாட்டு கமராவில் பதிவாகியுள்ளது.

ஓட்டுநரை காவல் நிலையத்திற்கு வரவழைத்து வழக்கறிஞர் முன்னிலையில் முதல் ஒரு மணியாலங்களுக்கு மேலான பொலிஸ் விசாரணையின் பின்னர் , அவரது ஓட்டுனர் உரிமம் பறிமுதல் செய்யப்பட்டதுடன், வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்