சுற்றுலா பயணிகள் மீது கற்களை வீச முற்பட்ட நபர் விளக்கமறியலில்

-பதுளை நிருபர்-

எல்ல பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது கற்களை வீச முற்பட்ட நபரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

கடந்த 28ஆம் திகதி பிற்பகல் எல்ல, கிடலெல்ல பகுதியை சேர்ந்த நபர் ஒருவரே இவ்வாறு எல்ல சுற்றுலா பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

எல்ல றொக்கிற்குச் செல்லவிருந்த அமெரிக்க சுற்றுலாப் பயணிகள் குழுவொன்றை சந்தேகநபர் வழிநடத்த முற்பட்ட போது, ​​அவர்கள் அதனை  மறுத்ததால், அவர்கள் மீது தாக்குதல் நடத்த முயற்சித்துள்ளார்.

இதன்போது, ​​ வெளிநாட்டு பெண் குறித்த சம்பவத்தை பதிவு செய்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதாகவும் அதன் பிரகாரம் சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டு பண்டாரவளை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் சந்தேக நபரை மார்ச் 4 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிவான் உத்தரவிட்டுள்ளதாக எல்ல பொலிஸார் தெரிவித்தனர்.

மேலதிக விசாரணைகளை எல்ல சுற்றுலா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்