சுரங்கப்பாதையில் மோதி வெளிநாட்டுப் பிரஜை உயிரிழப்பு

கொழும்பு கோட்டையிலிருந்து பதுளை நோக்கிப் பயணித்த உடரட்ட மெனிக்கே ரயிலில் சென்ற வெளிநாட்டுப் பிரஜை ஒருவர் புகையிரத சுரங்கப்பாதையில் மோதி இன்று திங்கட்கிழமை உயிரிழந்துள்ளதாக நானுஓயா ரயில் நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

எல்ல பிரதேசத்தை நோக்கி ரயிலில் பயணித்த வெளிநாட்டு பிரஜையொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

நானுஓயா மற்றும் இதல்கஸ்ஹின்ன ஆகிய ரயில் நிலையங்களுக்கு இடையில் உள்ள புகையிரத சுரங்கப்பாதையில் மோதி இவர் உயிரிழந்துள்ளதாக அந்த அதிகாரி தெரிவித்தார்.

இதனையடுத்து உயிரிழந்தவரது சடலம் ரயில்வே பாதுகாப்புப் பிரிவினரின் உதவியுடன் ஹப்புத்தளை ரயில் நிலையத்திற்குக் கொண்டு செல்லப்பட்டதாக அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்