சுனாமி எச்சரிக்கை குறித்து சமூக வலைத்தளங்களில் பரவும் செய்தி!

நாளை பௌர்ணமி தினத்தில் சுனாமி ஏற்படக்கூடும் என மக்கள் மற்றும் சமூக ஊடகங்கள் மத்தியில் பரவி வரும் தகவல் முற்றிலும் பொய்யானது என வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அதுல கருணாநாயக்க வலியுறுத்தியுள்ளார்.

சுனாமி அல்லது பூகம்பம் ஏற்படும் நேரத்தையோ, திகதியையோ யாராலும் கணிக்க முடியாது எனவும் மேலும் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்ககையில்,

2004 ஆம் ஆண்டு டிசம்பர் 26 ஆம் திகதி இலங்கை உட்பட பல நாடுகளை சுனாமி பேரலை தாக்கிய நிலையில், நாளை 26 ஆம் திகதி அதேப்போன்று பேரலையொன்று உருவாகலாம் என போலி தகவல் பரவியுள்ளது.

இருப்பினும், நிலநடுக்கம் அல்லது சுனாமி ஏற்பட்டால் முன்கூட்டியே அறிந்துகொள்ளும் அமைப்பு நாட்டில் இருப்பதாகவும் எவ்வாறாயினும், 24 மணி நேரமும் தொடர்ந்து கண்காணிப்பில் இருப்பதாக சர்வதேச சுனாமி எச்சரிக்கை மையங்கள் தெரிவித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதனால் மக்கள் தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டாம் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்