
சுகாதார உதவியாளர் ஒருவர் செய்த மோசமான செயல்
பெண் ஒருவரின் நிர்வாண புகைப்படங்களை இணையத்தில் பரப்பிய குற்றச்சாட்டில் சுகாதார உதவியாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பதுளையைச் சேர்ந்த 34 வயதுடைய சந்தேகநபர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கடந்த செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.
தனது நிர்வாண புகைப்படங்களை வைத்திருந்தமை மற்றும் பரப்பியமை தொடர்பில் பாதிக்கப்பட்ட பெண் முறைப்பாடு செய்ததை அடுத்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் குறிப்பிட்டுள்ளனர்.
