சீரற்ற வானிலையால் 3 விமானங்கள் மத்தளவில் தரையிறக்கம்
கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு பயணித்த 3 விமானங்கள், நேற்று செவ்வாய்கிழமை மாலை நிலவிய சீரற்ற வானிலை காரணமாகஇ மத்தள விமான நிலையத்துக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளன.
சென்னையில் இருந்து பயணித்த யூ.எல். 128 என்ற விமானமும், மாலைதீவிலிருந்து பயணித்தஇ ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான யு.எல் 116 என்ற விமானமும், மற்றுமொரு விமானமும் மத்தளவுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கட்டுநாயக்க விமான நிலையப் பகுதியில், வானிலை சீரானதை அடுத்து, குறித்த விமானங்களின் பயணிகள் அனைவரும், மீளவும் கட்டுநாயக்கவுக்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்