சீரற்ற காலநிலையால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 30ஆக உயர்வு

சீரற்ற காலநிலை காரணமாக நாட்டில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 30 ஆக உயர்ந்துள்ளதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்றைய அமர்வில் கலந்து கொண்டு வாய்மூல கேள்விக்கு பதிலளிக்கும் போதே, அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இறுதிச் சடங்குகளுக்காக 25,000 ரூபாவை அரசாங்கம் வழங்கி வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், இறந்தவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்