சீன அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட மண்ணெண்ணை மன்னார் மீனவர்களுக்கு பகிர்ந்தளிப்பு

 

-மன்னார் நிருபர்-

 

சீன அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட மீனவர் களுக்கான மண்ணெண்ணை மானிய அடிப்படையிலானது இன்று திங்கட்கிழமை மன்னார் மாவட்ட மீனவர்களுக்கு வைபவரீதியாக மன்னார் தனியார் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் வைத்து பகிர்ந்தளிக்கபட்டுள்ளது.

மன்னார் மாவட்டத்தில் 2431 மீனவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் முதல் கட்டமாக மீனவர்களுக்கு 75 லீற்றர் மண்ணெண்ணெய் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

மன்னார் நகர மீனவர்களுக்கு மன்னாரில் உள்ள தனியார் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

மன்னார் மாவட்ட கடற்தொழில் திணைக்கள உதவி பணிப்பாளர் ஏ.கலிஸ்ரன் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏ.ஸ்ரான்லி டிமேல், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் மன்னார் மாவட்ட இணைப்பாளர் எஸ்.சந்துரு உட்பட பலர் கலந்து கொண்டனர்.

மீனவர் ஒருவருக்கு 150 லீற்றர் மண்ணெண்ணெய் மானியமாக வழங்கப்பட உள்ள நிலையில் முதற்கட்டமாக மன்னார் நகர மீனவர்களுக்கு 75 லீற்றர் மண்ணெண்ணெய் வழங்கி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்