சீனா பயணமாகும் தொழில்நுட்பக் கல்வி பயிற்சித் திணைக்களத்தின் அதிகாரிகள்!

கல்வியமைச்சில் இருந்து 14 பேர் கொண்ட குழுவொன்று நாளை சனிக்கிழமை காலை சீனா பயணமாகவுள்ளனர்.

அந்த குழுவில் தொழில்நுட்பக் கல்வி பயிற்சித் திணைக்களத்தின் இரண்டு அதிகாரிகளான, திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமான எஸ்.ஜீ.ஜகத் மற்றும் நிர்வாக பணிப்பாளரான இரங்க தயாரத்ன ஆகியோர் அங்கம் வகிக்கின்றனர்.

“இலங்கையில் தொழிற்கல்வி” என்ற தலைப்பில் சீனாவில் இரண்டு வாரங்கள் நடைபெறவுள்ள முகாமைத்துவ மாநாட்டில் இவர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.

குறித்த 14 பேரும், கல்வி அமைச்சு, தேசிய தொழிற்பயிற்சி அதிகார சபை, தேசிய கைத்தொழில் பயிற்சி அதிகார சபை மற்றும் தேசிய தொழிற்கல்வி ஆணைக்குழு ஆகியவற்றை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்