
சீனாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்
சீனாவின் வடமேற்கு பகுதியில் நேற்று திங்கட்கிழமை நள்ளிரவில் ரிக்டர் அளவுகோலில் 7.2இல் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
சீனா – கிர்கிஸ்தான் எல்லையை ஒட்டி அமைந்துள்ள ஜின் ஜியாங் மாகாணத்தை மையமாக கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதில் 47 பேர் வரை இடிபாடுகளில் புதைந்ததாகவும் 200 க்கும் மேற்பட்டோர் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டதாகவும் சீனவின் அரசு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
