சிவன் மந்திரம்

சிவன் மந்திரம்

சிவன் மந்திரம்

🔱இந்த பிரபஞ்சத்தை உருவாக்கியவர் சிவபெருமான். அவர் இரக்கத்தின் சின்னமாக விளங்குகிறார். படைத்தல் காத்தல் அழித்தல் அருளல் மறைத்தல் ஆகிய ஐந்தொழில்களில் அழித்தல் தொழிலை செய்பவர் சிவபெருமான்.

🔱அந்தவகையில் சிவபெருமானுக்குரிய சிவ மந்திரங்களை தொடர்ந்து உச்சரிப்பதால் வெற்றியும் காரிய சித்தியும் வாய்க்கும். ஒரு மனிதரின் ஆழ் மனது வலிமை மற்றும் ஆற்றலை அதிகரிக்கும் சக்தி சிவ மந்திரத்திற்கு உண்டு. உடல், மனம் ஆன்மா என்று சகலத்தையும் சுத்தம் செய்யும் தன்மை இந்த மந்திரங்களுக்கு உண்டு. மனித வாழிவில் அன்றாடம் கடந்து வரும், மன அழுத்தம்இ சோர்வு, தோல்வி, புறக்கணிப்பு, மற்றும் இதர எதிர்மறை ஆற்றல்கள் ஆகியவற்றைப் போக்க இந்த மத்திரங்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

🔱சக்தி மிக்கவர்களாக, ஆற்றல் மிக்கவர்களாக, நேர்மறை சிந்தனையோடு போராடும் பலம் வாய்ந்தவர்களாக மாற்றும் சக்தி சிவ மந்திரங்களுக்கு உண்டு. சிவபெருமானுக்குரிய ஒவ்வொரு மந்திரங்களுக்கும், ஒவ்ெவாரு சக்தி உண்டு. அது என்ன என்பதைப் பார்ப்போம்.

பஞ்சாட்சர சிவ மந்திரம்

💥ஓம் நமசிவாய

சிவ மந்திரம்

💥நமச்சிவாய வாழ்க!
நாதன் தாள் வாழ்க!
இமைப்பொழுதும் நீங்காதான் தாள் வாழ்க!
கோகழி ஆண்ட குருமணிதான் தாள் வாழ்க!

சிவன் பிரதோஷ மந்திரம்

💥ம்ருத்யுஞ்ஜயாய ருத்ராய!
நீலகண்ட்டாய சம்பவே!
அம்ருதேஸாய சரவாய!
மஹாதேவாய தே நமஹ!

பாவம் நீக்கும் தியான மந்திரம்

💥கர சரண க்ருதம் வாக் காயஜம் கர்மஜம் வா
ஸ்ரவண நயனஜம் வா மானஸம் வ அபராதம்
விஹிதம் அவிஹிதம் வா ஸ்ர்வமேதத் க்ஷமஸ்வ
ஜய ஜய கருணாப்தே ஸ்ரீ மஹாதேவ ஷம்போ

சிவ காயத்ரி மந்திரம்

💥ஓம் தத்புருஷாய வித்மஹே
மஹாதேவாய தீமஹி
தன்னோ ருத்ரஹ் ப்ரசோதயாத்

மரண பயம் போக்கும் மந்திரம்

💥ஓம் த்ரயம்பகம் யஜாமஹே ஸுகந்திம் புஷ்டிவர்த்தனம்
உர்வாருகமிவ பந்தனான் ம்ருத்யோர் முக்ஷீய மாம்ருதாத்

ருத்ர மந்திரம்

💥நமஸ்தே அஸ்து பகவான் விஸ்வேஸ்வராய மஹாதேவாய
த்ரயம்பகாய திரிபுராந்தகாய த்ரிகாக்னி கலாய.
காலக்னீ ருத்ராயனிலகண்டாய ம்ருத்யுஞ்ஜய
ஸர்வேஸ்வராய ஸதா சிவாய ஸ்ரீமன் மஹாதேவாய நம.

தரித்திரம் நீக்கும் மந்திரம்

💥ஓம் ருத்ராய ரோகநாஷாய
அகச்சே சஹ் ரம் ஓம் நமஹ

பிரதோஷ மந்திரம்

💥ம்ருத்யுஞ்ஜயாய ருத்ராய நீலகண்ட்டாய சம்பவே
அம்ருதேஸாய சர்வாய மஹாதேவாய தே நமஹ

சிவன் மூல மந்திரம்

💥ஓம்கார நமசிவாய ஓம் நகாராய நமசிவாய‌
ஓம் மகாராய நமசிவாய ஓம் சிகாராய நமசிவாய
ஓம் வகாராய நமசிவாய ஓம் யகாராய நமசிவாய ஓம் நம
ஸ்ரீ குரு தேவாய, பரமபுருஷாய ஸர்வ தேவதா வசீகராய‌
ஸர்வாரிஷ்ட விநாசாய ஸர்வ துர்மந்தரச் சேதனாய
த்ரை லோக்யம் வசமாய ஸ்வாஹா

சிவன் மந்திரம்

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்