சிறுவர் வன்முறைக்கெதிரான கூட்டத்தினை குழப்பிய ஆலய ஒலிபெருக்கி!

-யாழ் நிருபர்-

 

சங்கானை பிரதேச செயலகமும் சில தொண்டு நிறுவனங்களும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த சிறுவர் உரிமைகள் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு பேரணியும் கூட்டமும் சங்கானை பேருந்து நிலையத்தில் இன்று வெள்ளிக்கிழமை காலை இடம்பெற்றது.

இதில் யாழ். மாவட்ட அரச அதிபர்இ யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் மஞ்சுள செனவிரத்ன மற்றும் வட்டுக்கோட்டை, மானிப்பாய், இளவாலை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகளும் கலந்துகொண்டிருந்தனர்.

நிகழ்வு ஆரம்பான சிறிது நேரத்தில் அருகிலுள்ள ஆலயத்தில் பொருத்தப்பட்டிருந்த அதிக ஒலிபெருக்கிகள் மற்றும் பாரிய ஒலிப்பெட்டிகள் என்பனவற்றிலிருந்து ஒலி வந்தவண்ணமிருந்த்து. இதனால் அங்கிருந்தவர்கள் அசௌகரியத்திற்குள்ளாகினர். பிரதிப் பொலிஸ்மா அதிபரும் மிகுந்த சிரமத்திற்குள்ளானார்.

உடனடியாக பொலிசாரை அழைத்து கடுந்தொனியில் ஒலியை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டதையடுத்து அங்கு விரைந்த பொலிசார் ஒலிபெருக்கி சத்தத்தினை நிறுத்தினர்.

இந்தப் பிரதேசங்களில் ஒலிபெருக்கித் தொல்லை தொடர்ச்சியாக இடம்பெற்றுவருவது யாவரும் அறிந்ததே.

பரீட்டைகள் நடைபெறும் காலத்திலாவது இவற்றை கட்டுப்படுத்துமாறு மாணவர்களும் பொதுமக்களும் தொடர்ச்சியாக இதே பொலிசாருக்கு முறையிட்டும் எந்தவித நடவடிக்கை எடுக்காதவர்கள் உயரதிகாரி சிறிதுநேரம் பாதிக்கப்பட்டதும் பறந்து செல்கிறார்கள்.

பிரதிப் பொலிஸ்மா அதிபர் சிறிதுநேரம் அனுபவித்த தொல்லையினைத்தான் வலி. மேற்கு மற்றும் வலி தென் மேற்கு மக்கள் தொடர்ச்சியாக அனுபவித்து வருகிறார்கள்.

இனியாவது மக்களால் தாங்கிக்கொள்ளமுடியாத அளவு ஒலியை பரப்புவதற்கு ஆலயங்களிற்கு அனுமதி கொடுக்காமல் இருப்பார்களா என மக்கள் தெரிவித்தனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்