சிறுவர் பாதுகாப்பு தொடர்பில் பயிற்சி பட்டறை

-கிண்ணியா நிருபர்-

தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையும் கல்வி அமைச்சும் இணைந்து முன்னெடுக்கும் பாடசாலை சிறுவர் பாதுகாப்பு குழு வேலைத்திட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட பாடசாலைகளுக்கான சான்றிதழ் வழங்குதல் மற்றும் அதிபர்களுக்கான பயிற்சி கருத்தரங்கு நேற்று வியாழக்கிழமை மூதூர் பிரதேச செயலாளர் எம். முபாரக் தலைமையில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.

மூதூர் வலயக்கல்வி பணிமனையின் பிரதிக் கல்வி பணிப்பாளர் ஹாபிஸ், முறைசாரா கல்வி பிரிவு உதவி கல்வி பணிப்பாளர் ஐஹார் , மாவட்ட செயலக சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர், மாவட்ட உள சமூக உத்தியோகத்தர் ஆகியோரின் பங்குபற்றலுடன் மூதூர் பிரதேச செயலக சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் மு.சாபி அவர்களின் ஏற்பாட்டில் இடம்பெற்றது.

குறித்த நிகழ்வில் வளவாளராக கலந்து கொண்ட மாவட்ட உள சமூக உத்தியோகத்தர் மு.மு.ஸம்ஸித் அவர்களால் சிறுவர் பாதுகாப்பு குழுவின் செயற்பாடுகள், நடைமுறைப்படுத்துவதில் அதிபர்களின் வகிபாகம் போன்ற பல விடயங்கள் குறித்து தெளிவூட்டல்கள் இதன்போது வழங்கப்பட்டது.