சிறுவர் தின கவிதைகள்

சிறுவர் தின கவிதைகள்

சிறுவர் தின கவிதைகள்

💥மொட்டவிழ்ந்த மலர்களாய்
சிறகடிக்கும் பறவைகளாய்
மிளிர்கின்ற நட்சத்திரங்களாய்
களங்கமில்லா உள்ளத்துடன்
காண்கின்ற கடவுளாய்
இயந்திர உலகினிலே
இயந்திரமாய் வாழும் எங்கள்
வாழ்கையை

💥அர்த்தமுள்ளதாய் மாற்றும்
மின்மினி பூச்சுகளே
எங்கள் செல்வங்களே……
இன்று உலக சிறுவர் தினமாம்
ஆனால் கணமூலை இதுவரை
கண்டதில்லை இதுபோன்ற
ஒருதினத்தை
ஒன்று கூடினோம் உங்களுக்காக
திரண்டு வந்தோம் சிறுவராகிய எங்கள்
செல்வங்களுக்காக

💥வானம்பாடிகளாய் நாம் திரிந்தாலும்
நாங்கள் வந்து இளைப்பாறும் வேடந்தாங்கல்
நீங்கள் அல்லவோ
அல்லல்ப்படும் உலகினிலே எங்கள்
மனக்கவலை தீர்க்க
மசட்டவர்களை வந்துதித்த மாணிக்கங்களே

💥சுவர்க்கம் நரகம் என்று இரண்டு
ஊர உண்டாம்
கண்டுள்ளோம் நாமும் சுவர்கத்தை
சிறுவரகிய நீங்கள் உள்ள
இடங்களிலே

💥இன்று நகர்ந்து கொண்டிருக்கும்
இயந்திர வாழ்க்கையிலே
உங்களை கூட விட்டுவைக்கவில்லை
இந்த உலகம்

💥இனியொரு விதி செய்வோம் என்றான் பாரதி
ஆனால் நாங்கள் இனியொரு விதி செய்யவில்லை
இனியொரு யுகம் படைக்கின்றோம்

💥பூபோன்ற உங்கள் மனதை புண்ணாக்க
ஒருபோதும் விடமாட்டோம்
புறப்பட்டோம் உங்கள் உரிமை காக்க
உரிமை என்றால்
நீங்கள் நீங்களாகவே வாழ
நாங்கள் வகுத்து தரும் பாதை

 

💢நதியினும் நீண்ட நடை எடு – தீய
நரிகளைக் கூண்டில் அடைத்திடு
மலைகளைத் தாண்டி ஏறிடு – அங்கோர்
மரத்தினை நட்டு எரு இடு

💢மனிதரில் உண்டு பல இனம்-தீய
மனிதனின் உள்ளம் சுகயீனம்
நல்லதை ஏற்று நடந்திடு – நீ
கெட்டதை ஏற்க மறுத்திடு

💢தடைகளைத் தாண்டி மடையுடை-நீ
மறுமைக்காய் வாழ்வினை துடை துடை
போட்டியின் தடைகளை உடை உடை-அஙகோர்
ஏழைக்கும் எழுத்தினை படை படை

💢நுட்பத்தின் நூதனம் நுணுக்கத்தை-நீ
நுனிவரை திறத்தால் கொண்டு செல்
நாளைய உலகின் நகர்தலை – நல்ல
தரத்தினில் நுகர்ந்திட சிகரம் செய்.

 

📍நோய் நொடியின்றி
நூறாண்டு வாழ்ந்திட – நீ
பாய் படுக்கையிலே
படராமல் வாழ்ந்திட – நீ
தாய் தந்தையரை
தாங்கியே காத்திடு – நீ
ஏய் என்றொருசொல்
ஏசாது பார்த்திடு – உண்மை
சேய்நீ என்றே
சொந்தமெலாம் புகழ்ந்திடவே!

சிறுவர் தின கவிதைகள்

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்