சிறுவர் தினத்தன்று கொலை செய்யப்பட்ட மாணவன்: மக்கள் ஆர்ப்பாட்டம்
மாத்தளை – நாலந்தவத்தை பகுதியில் சிறுவர் தினத்தன்று பாடசாலை மாணவர் ஒருவர் கொல்லப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
குறித்த மாணவரின் உறவினர்கள், பாடசாலை மாணவர்கள் மற்றும் பிரதேசவாசிகளினால் அந்த மாணவரின் பாடசாலைக்கு முன்பாக இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் இதுவரையில் பொலிஸாரால் கைது செய்யப்படவில்லை என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.
ஆர்ப்பாட்டம் காரணமாக அங்கு அமைதியின்மை நிலவியதுடன், யாழ்ப்பாணம் – கண்டி ஏ9 பிரதான வீதியில் வாகன நெரிசல் ஏற்பட்டது.
இதனையடுத்து குறித்த சம்பவம் தொடர்பில் 7 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்