காணாமல் போன சிறுவர்களை கண்டுபிடிக்க தீவிர விசாரணை
புத்தாண்டு தினத்திலிருந்து வென்னப்புவ பிரதேசத்தைச் சேர்ந்த மூன்று சிறுவர்கள் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வென்னப்புவ தும்மலகெதர மற்றும் ஜெயவீதி மாவத்தை ஆகிய பிரதேசங்களை சேர்ந்த 15 வயதுடைய இருவர் மற்றும் 14 வயதுடைய ஒரு சிறுவன் உட்பட மூவர் காணாமல் போயுள்ளனர்.
காணாமல் போன சிறுவர்களை கண்டுபிடிக்க வென்னப்புவ பொலிஸார் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
முதற்கட்ட விசாரணையில் மூன்று சிறுவர்களும் ஒரே பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர்கள் என தெரியவந்துள்ளது.
மேலும், காணாமல் போன சிறுவர்கள் கைத்தொலைபேசிகளை வைத்திருப்பதாகவும், அவர்களை கண்டறிய அவர்களது கைபேசி எண்களை பொலிஸார் கண்காணித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்