சிறுவர்களை கடத்துவதாக வெளியாகும் தகவல்களை நம்ப வேண்டாம்
சிறுவர்களை கடத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாக சமூக ஊடகங்களில் பரவும் போலி செய்திகளை நம்பி ஏமாற வேண்டாம் என பொலிஸ் தலைமையகம் மீண்டும் பொதுமக்களை கோரியுள்ளது.
சிறார்கள் கடத்தப்படவுள்ளதாக அண்மைய சில நாட்களாக கிடைக்கப்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் கடும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன. இதன்போது, அவை போலியானவை என கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறான போலித் தகவல்களை பரிமாற்றுபவர்கள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் போலி பிரசாரங்களை முன்னெடுப்பவர்கள் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்