
சிறுவன் ஒருவன் தன்னைதானே துப்பாக்கியால் சுட்டு உயிரை மாய்ப்பு
அம்பாறை – பண்டாரதுவ – மாயாதுன்ன பிரதேசத்தில் 15 வயது சிறுவன் ஒருவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இச்சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த சிறுவன் தனது வீட்டில் வைத்து தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டுக் கொண்டதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இதன்போது, பலத்த காயமடைந்த சிறுவன் அம்பாறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
