சிறுமியை தாக்கிய தாயின் கணவர் கைது

மீஹகதென்னை பகுதியில் 9 வயது சிறுமியை கொடூரமாகக் தாக்கிய சந்தேகத்தின் பேரில் சிறுமியின் தாயின் கணவரை சந்தேகத்தில் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மீஹகதென்னை பகுதியை சேர்ந்த சிறுமியின் தாயின் சட்ட ரீதியற்ற கணவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளர்.

சிறுமியின் தாயார் வெளிநாட்டில் இருப்பதாகவும் சந்தேக நபரிடம் தனது மகளை ஒப்படைத்து விட்டு வெளிநாடு சென்றுள்ளதாகவும், சந்தேக நபர் மது போதையில் வந்து பிளாஸ்டிக் மட்டை போன்ற ஒன்றினால் சிறுமியைத் தாக்கியுள்ளதாகவும் பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்