சிறுபோக நெற் செய்கைக்கான விதைப்பு ஆரம்பம்

 

-கிண்ணியா நிருபர்-

திருகோணமலை மாவட்டத்தில் உள்ள பல பகுதிகளிலும் சிறுபோகத்துக்கான நெற் செய்கை ஆரம்பமாகியுள்ளது.

இருந்த போதிலும் உழவுக் கூலி உட்பட நெற் செய்கைக்கான ஏனைய சில பொருட்களும் அதிகரித்துள்ளதனால் தாங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக கவலை தெரிவிக்கின்றனர்.

தம்பலகாமம், முள்ளிப்பொத்தானை கமநல சேவை பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் இம் முறை சுமார் 7000 க்கும் மேற்பட்ட ஏக்கர் வயல் நிலங்களில் நெற் செய்கை செய்கை பண்ணப்படுகிறது.

இதற்காக பலர் உழவு இயந்திரம் மூலமாக பதப்படுத்தி விதைப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

விவசாயிகளுக்கான போதுமான மானிய யூரியா பசளை உள்ளிட்டவற்றையும் கிருமிநாசினிகளையும் நிர்ணய விலையில் பெற்றுத் தர வேண்டும் எனவும் தெரிவிக்கின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்