சிறீதரன் வழங்கியுள்ள உத்தரவாதம்

இலங்கை தமிழரசு கட்சியினுடைய வரலாற்றிலே ஜனநாயக ரீதியான உரையாடல் மற்றும் செயல்முறையின் ஊடாக முக்கிய வரலாற்றை பதித்துள்ளதாக தமிழரசு கட்சியின் புதிய தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

தன்னுடன் போட்டியிட்ட சுமந்திரன் மற்றும் யோகேஸ்வரனுடன் இணைந்து கட்சியுடைய செயற்பாட்டினை இன்னும் பல வழிகளில் தேசியத்தின் ஒவ்வொரு அங்குலத்துக்காகவும் தொடர்ந்து பொறுப்போடும் கடமையுடனும் செயற்படுவோம் எனவும் அவர் உறுதியளித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் தெரிவிக்கையில்,

என்னை தெரிவு செய்வதற்கு காரணமாக இருந்த இயற்கை என்னும் இறைவனுக்கும் எனக்காக உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் அயராது உழைத்த அந்த பொதுசபை உறுப்பினர்களின் மிகப் பெறுமதியான வாக்குகளால் தவைவராக தெரிவு செய்ததற்கு முதலில் எனது நன்றிகள்.

இது இன்று பலபேருக்கு பல நம்பிக்கைகளை தந்திருக்கின்றது. பல இளைஞர் யுவதிகள் கட்சி பற்றிய அதிகமான அக்கறை கொள்ளவைத்துள்ளது.என்னுடன் போட்டியிட்ட நண்பர் சுமந்திரன், யோகேஸ்வரனுடன் இணைந்து கட்சியுனுடைய செயற்பாட்டினை இன்னும் பல வழிகளில் எமது மக்களின் உரிமைக்காக தேசிய இருப்புக்காக தேசியத்தின் ஒவ்வொரு அங்குலத்துக்காகவும் தொடர்ந்து எங்களுடைய பொறுப்போடும் கடமையுடனும் செயற்படுவோம்.

அந்த கடமையை சரியாக செய்வோம். அதற்காக பல தடவை பல ஊடகங்கள் ஊடாக எங்களுடைய ஒற்றுமையையும் பலத்தையும் தெளிவுபடுத்தியிருந்தோம் என சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்