சிறீதரனுக்கு வாழ்த்து தெரிவித்த சுமந்திரன்

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் தெரிவில் வெற்றி பெற்று புதிய தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரனுடன் தான் ஒன்றாக சேர்ந்து பயணிக்கவுள்ளதாக சுமந்திரன் தெரிவித்தார்.

திருகோணமலையில் இன்றைய தினம் ஞாயிற்று கிழமை இடம்பெற்ற இலங்கைத் தமிழ் அரசு கட்சியின் தலைவர் தெரிவின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு கூறினார்.

மேலும் கூறுகையில்,

“நாம் ஒற்றுமையாக பயணிப்போம் இன்றைய தினம் எமது தமிழரசுக் கட்சி உட்கட்சி ஜனநாயகத்தை நாட்டிற்கும் சர்வதேசத்திற்கும் முன்மாதிரியாக நிகழ்த்திக் காட்டி இருக்கின்றது. இதில் வெற்றி பெற்ற சக வேட்பாளர் மற்றும் எனது நண்பன் சிறீதரனுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்து கொள்கின்றேன்” என தெரிவித்தார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்