சிப்பாயின் உயிரைக் குடித்த உடற்பயிற்சி

வவுனியா பூனேவ கடற்படை முகாமில் இன்றைக்கு இரண்டு மாதங்களுக்கு முன்னர் இணைந்துகொண்ட சிப்பாய் ஒருவர் நேற்று முன்தினம் புதன்கிழமை உடற்பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது திடீரென சுகயீனமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.

அனுராதபுரம், திறப்பனை பிரதேசத்தைச் சேர்ந்த நிமந்த டில்ஷான் தயாரத்ன என்பவரே இவ்வாறு மரணமடைந்துள்ளார்.

குறித்த சிப்பாய் உடற்பயிற்சியில் ஈடுபட்டுகொண்டிருந்த போது திடீரென சுகயீனமடைந்தார். அவரை பூனே கடற்படை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர், மேலதிக சிகிச்சைகளுக்காக வவுனியா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார்.