
சித்திரவேலாயுதரின் வேலில் மோதி மோட்டார் சைக்கிள் விபத்து: அதிபர் படுகாயம்
– கோ.த.டிலூக்சன் –
வாகரை, பால்சேனை நாகபுரம் நாகதம்பிரான் ஆலயத்திற்கு அருகில் நேற்று சனிக்கிழமை மாலை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கட்டுமுறிவு அ.த.க பாடசாலை அதிபரான கதிரவெளியை சேர்ந்த ஜீவனேஸ்வரன் என்பவரே இவ்வாறு மோட்டார் சைக்கிள் விபத்தில் படுகாயம் அடைந்துள்ளார்.
இந்த விபத்து தொடர்பில் மேலும் தெரியவருகையில், குறித்த அதிபர் வாகரை பகுதியில் இருந்து தனது வீடு நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது, வெருகல் சித்திரவேலாயுதர் ஆலயத்திற்கு பாதயாத்திரை சென்று கொண்டிருந்த ஒருவரின் கையில் இருந்த வேலில் பட்டு இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக விசாரனைகளில் தெரியவந்துள்ளது .
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
