சிசிலியா பெண்கள் தேசிய பாடசாலையின் மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டி

மட்டக்களப்பு புனித சிசிலியா பெண்கள் தேசிய பாடசாலையின் 2025 ஆம் ஆண்டுக்கான இல்ல மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டி நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை மாலை 3.00 மணியளவில் இடம்பெற்றது.

மட்டக்களப்பு புனித சிசிலியா பெண்கள் தேசிய பாடசாலை அதிபர் அருட்சகோதரி நித்தாஞ்சலி தலைமையில் இடம் பெற்றதுடன், இல்ல விளையாட்டுப் போட்டியில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்ஷினி ஸ்ரீகாந்த், கௌரவ அதிதியாக மட்டக்களப்பு வலயக்கல்வி விளையாட்டிற்கான உதவி உடற்கல்விப் பணிப்பாளர் வி.லவக்குமார், சிறப்பு அதிதியாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் சிரேஷ்ட மருத்துவர் ஜி. மணிவண்ணன் மற்றும் திருமதி. எம் மிதுனா ஆகியோர் கலந்Jகொண்டு சிறப்பித்தனர்.

கடந்த மூன்று ஆண்டுகளாக முதலிடம் பிடித்த மாறி இல்லத்தை இம்முறை காசில்டா இல்லமானது சுமார் 50 புள்ளிகளினால் முன்னிலை வகுத்து காசில்டா இல்லம் மொத்தமாக 485 புள்ளிகளைப் பெற்று மீண்டும் முதலாவது இடத்தை தன் வசப்படுத்தியது.

ஃப்ரீடா இல்லம் 445 புள்ளிகளைப் பெற்று இரண்டாம் இடத்தையும், மாறி 412 புள்ளிகளைப் பெற்று மூன்றாவது இடத்தையும் மற்றும் 388 புள்ளிகளைப் பெற்று கான்சிலியா நான்காவது இடத்தினையும் தன்வசப்படுத்தியதோடு இப்போட்டிகளில் இடம் பெற்ற அணிநடை, உடற்பயிற்சிக் கண்காட்சி, பேண்ட் வாத்தியம் ஆகியன அனைவரதும் கவனத்தை ஈர்த்தமை குறிப்பிடத்தக்கது. இதன் போது பாடசாலையின் ஆசிரியர்கள் , பாடசாலையின் பழைய மாணவிகள், மாணவிகளின் பெற்றோர்கள், மற்றும் பொதுமக்கள் என பலரும் கொண்டு சிறப்பித்தனர்.