
-யாழ் நிருபர்-
யாழ்ப்பாணம் – சாவகச்சேரி நீதிவான் நீதிமன்ற வளாகத்தில் இன்று காலை முதல் பொலிஸ், மற்றும் விசேட அதிரடிப் படையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றத்துக்கு தாக்குதல் நடத்தப்படப்போவதாக பொலிஸாரின் தொலைபேசிக்கு வழங்கப்பட்ட மர்ம நபரின் தகவலுக்கமைய குறித்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனையடுத்து கடும் சோதனைகளுக்கு பின்னரே நீதிமன்ற நடவடிக்கைகளில் பங்கேற்க பொதுமக்களுக்கு அனுமதிக்கப்படுகிறது.
இதேவேளை சம்பவம் தொடர்பில் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தைத் தொடர்பு கொண்டு வினவிய போது அவ்வாறான தாக்குதல் திட்டம் தொடர்பில் எந்த தகவல்களும் தமக்குக் கிடைக்கப்பெறவில்லை எனவும், நீதிமன்றத்துக்குப் போதைப்பொருளுடன் வருகைதருபவர்களைக் கைது செய்யும் நோக்கிலேயே சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதாக சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
