சாவகச்சேரியில் திருடப்பட்ட மோட்டார் சைக்கிள் மன்னாரில் மீட்பு

-யாழ் நிருபர்-

சாவகச்சேரியில் கடந்த திங்கட்கிழமை திருடப்பட்ட மோட்டார்சைக்கிள் சாவகச்சேரி பொலிஸாரின் துரித முயற்சியால் மன்னாரில் வைத்து மீட்கப்பட்டது.

சாவகச்சேரி நகரப் பகுதியில் உள்ள மருத்துவ நிலையத்தில் சிகிச்சை பெறச்சென்ற ஒருவர் தனது மோட்டார்சைக்கிளை அங்கு நிறுத்தி விட்டுச் சென்றுள்ளார். திரும்பிவந்து பார்த்த போது மோட்டார்சைக்கிள் திருடப்பட்டிருந்தது.

இதையடுத்து அவர் சாவகச்சேரிப்பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டைப் பதிவு செய்துள்ளார். விரைந்து செயற்பட்ட சாவகச்சேரிப் பொலிஸார் பொலிஸ் நிலையங்களுக்கும் சோதனைச் சாவடிகளுக்கும் தகவல் வழங்கினார்கள்.

இதையடுத்து மன்னார் சோதனைச்சாவடியில் வைத்து மோட்டார் சைக்கிள் மீட்கப்பட்டதுடன், மோட்டார் சைக்கிளைத் திருடியவரும் கைதுசெய்யப்பட்டார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்