சர்வதேச புகைத்தல் எதிர்ப்பு தினத்தினை முன்னிட்டு கொடி விற்பனை செய்யும் நிகழ்வு

-கிண்ணியா நிருபர்-

சர்வதேச புகைத்தல் எதிர்ப்பு தினத்தினை முன்னிட்டு நேற்று புதன்கிழமை தம்பலகாமம் பிரதேச செயலக சமுர்த்தி வங்கி பிரிவின் ஏற்பாட்டில் புகைத்தலுக்கு எதிரான வாசகம் அடங்கிய கொடி விற்பனை செய்யும் நிகழ்வு இடம் பெற்றது.

தம்பலகாமம் பிரதேச செயலாளர் ஜெ.ஸ்ரீபதி தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்ட குறித்த நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர் இரா.பிரசாந்தன்,  சமுர்த்தி தலைமை முகாமையாளர் ஏ.ஆர்.எம்.சித்திக், சமுர்த்தி வங்கி முகாமையாளர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்