சர்வதேச நாணய நிதியத்தின் உயர்மட்ட குழு அரச பிரதிநிதிகளுடன் பேச்சு
இலங்கை வந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் உயர்மட்ட பிரதிநிதிகள், அரசாங்கத்துடன் இன்று கலந்துரையாடியுள்ளனர்.
சர்வதேச நாணய நிதியத்துடனான வேலைத்திட்டத்துடன் இணைந்ததாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான புதிய அரசாங்கத்தின் எதிர்கால செயற்திட்டம் குறித்து ஆராய்வதற்காக சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக் குழுவொன்று இன்று புதன்கிழமை இலங்கைக்கு விஜயம் செய்தது.
இதன்போது “தற்போதைய அரசாங்கத்தின் கீழ் இலங்கை மீதான நேர்மறையான கண்ணோட்டத்தை அதிகரிக்கும் மாற்றங்கள் குறித்து அவர்கள் பாராட்டு தெரிவித்தனர்” என ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்