சர்வதேச சிறுவர் மற்றும் முதியோர் தினம் : பிரதமரின் வாழ்த்துச் செய்தி!

சர்வதேச சிறுவர் தினத்தை தொனிப்பொருளுடன் மாத்திரம் மட்டுப்படுத்தாமல், அதனை யதார்த்தமாக்குவதே தற்போதைய அரசாங்கத்தின் நோக்கமாகும் என பிரதமர் ஹரினி அமரசூரிய தமது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

இன்றைய சர்வதேச சிறுவர் மற்றும் முதியோர் தின வாழ்த்துச் செய்தியில் அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் ஓய்வூதிய பலன்களை மேம்படுத்துவதற்கும், இலவச மருத்துவ சேவைகளை உறுதி செய்வதற்கும் தமது அரசாங்கம் உறுதிபூண்டுள்ளதாகவும் பிரதமர் ஹரினி அமரசூரிய குறிப்பிட்டுள்ளார்.