சர்வதேச சிறுவர் மற்றும் முதியோர் தினம் : ஜனாதிபதியின் வாழ்த்துச் செய்தி!

சிறுவர்களின் உள, சமூக வளர்ச்சியைத் தடுக்கும் காரணிகள் மற்றும் மன அழுத்தத்தை ஏற்படுத்தும் வகையிலான கல்வி முறைமையிலிருந்து தற்போதைய இளம் தலைமுறையினரை விடுவிப்பதே, மறுமலர்ச்சிக் கால பணியின் இலக்காகும் என ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

இன்றைய சர்வதேச சிறுவர் மற்றும் முதியோர் தின வாழ்த்துச் செய்தியில் அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் அவர்களுக்கே உரித்தான குழந்தைப் பருவ உலகத்தை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

மனித நேயம், பரஸ்பர நம்பிக்கை, மரியாதை மற்றும் சிறந்த சமூகத்தை உருவாக்குவதற்குத் தேவையான அரசியல் மாற்றத்தை முன்னெடுப்பதற்கும், சுற்றாடலைப் பாதுகாப்பதற்கும் தாம் முன்னுரிமையளிக்கவுள்ளதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், சிரேஷ்ட பிரஜைகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரின் சுதந்திரத்திற்காகவும் தாம் அர்ப்பணிப்புடன் செயற்படவுள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.