சர்க்கரை நோயாளிகள் பன்னீர் சாப்பிடலாமா

சர்க்கரை நோயாளிகள் பன்னீர் சாப்பிடலாமா

சர்க்கரை நோயாளிகள் பன்னீர் சாப்பிடலாமா

🔷உலகில் பெரும்பாலானோருக்கு சர்க்கரை நோய் உள்ளது. சர்க்கரை நோய் இருந்தால், உண்ணும் உணவுகளில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் உணவுகள் தான் சர்க்கரை நோயாளிகளின் உடலில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். குறிப்பாக சர்க்கரை நோய் உள்ளவர்கள் நார்ச்சத்துள்ள உணவுகளை அதிகம் உண்ண வேண்டும். அதேப்போல் கார்போஹைட்ரேட் உணவுகளை குறைவான அளவில் உட்கொள்ள வேண்டும். குறிப்பாக இறைச்சிகளை சர்க்கரை நோயாளிகள் தவிர்ப்பது நல்லது.

🔷தற்போது மக்கள் பன்னீரை அதிகம் விரும்பி சாப்பிடுகிறார்கள். பாலில் இருந்து தயாரிக்கப்படும் பன்னீர், புரோட்டீன் அதிகம் நிறைந்தது. இது சைவ உணவாளருக்கு ஏற்ற அற்புதமான ஒரு புரோட்டீன் உணவாகும். இந்த பன்னீரில் புரோட்டீனைத் தவிர, பல்வேறு ஆரோக்கிய நன்மைகளும் உடலுக்கு கிடைக்கும். பன்னீரை சர்க்கரை நோயாளிகள் சாப்பிடலாமா என்று பலரது மனதிலும் ஒருவித கேள்வி நிச்சயம் எழும். அந்த கேள்விக்கான விடையை இக்கட்டுரையைத் தெரிந்து கொள்ளலாம்.

💦பாலில் இருந்து தயாரிக்கப்படும் பன்னீர் சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. சொல்லப்போனால், பன்னீர் சர்க்கரை நோயாளிகளுக்கான மிகவும் சிறப்பான உணவுப் பொருள் என்றே கூறலாம். ஏனெனில், பன்னீரில் கிளைசீமிக் இன்டெக்ஸ் மிகவும் குறைவு. கிளைசீமிக் இன்டெக்ஸ் குறைவாக இருக்கும் உணவுகளை தான் சர்க்கரை நோயாளிகள் உண்ண வேண்டும். ஏனெனில் கிளைசீமிக் இன்டெக்ஸ் கார்போஹைட்ரேட் உணவுகளை நிர்வகித்து, இரத்த சர்க்கரையில் அதன் விளைவை ஒழுங்குபடுத்துகிறது.

💦பொதுவாக புரோட்டீன் உடலில் மிகவும் மெதுவாக ஜீரணிக்கப்படுவதால், அது கார்போஹைட்ரேட்டுகளை கொஞ்சம் கொஞ்சமாக வெளியிடச் செய்யும். இதன் விளைவாக இரத்தத்தில் சர்க்கரையின் அளவு சட்டென்று அதிகரிக்காது. எனவே தான் சர்க்கரை நோயாளிகள் பன்னீர் சிறந்த உணவாக விளங்குகிறது. குறிப்பாக டைப்-2 சர்க்கரை நோயாளிகளுக்கு பன்னீர் மிகச்சிறந்த உணவுப் பொருள்.

பன்னீர் சர்க்கரை நோயாளிகளுக்கு வழங்கும் நன்மைகள்

  1. பன்னீர் குறைவான கிளைசீமிக் இன்டெக்ஸ் கொண்ட ஒரு அற்புதமான உணவுப் பொருள்.
  2. பன்னீர் இரத்த சர்க்கரை அளவை சட்டென்று அதிகரிக்காது. ஏனெனில் இதில் கார்போஹைட்ரேட் குறைவு.
  3. சமீபத்திய ஆய்வு ஒன்றில், பன்னீரை அடிக்கடி உட்கொண்டு வந்தால், அது டைப்-2 சர்க்கரை நோயின் அபாயத்தைக் குறைக்கும் என்பது தெரிய வந்துள்ளது.
  4. பன்னீரில் புரோட்டீன் மற்றும் பல்வேறு நுண்ணூட்டச்சத்துக்கள் அதிகம் உள்ளன. இவை உடலில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளாக செயல்படுகின்றன.
  5. கூடுதலாக பன்னீர் எலும்புகளுக்கும், இதய ஆரோக்கியத்திற்கும் நல்லது. இது தவிர நல்ல செரிமானத்திற்கு உதவுகிறது.

💦பன்னீரில் புரோட்டீன் அதிகமாகவும், கார்போஹைட்ரேட் குறைவாகவும் இருப்பதால், இதை பலவாறு சர்க்கரை நோயாளிகள் தங்களின் உணவில் சேர்க்கலாம்.

💦என்ன தான் ஆரோக்கியமான உணவுப் பொருளாக இருந்தாலும், பன்னீரை சர்க்கரை நோயாளிகள் வாரத்திற்கு 2 முறை சாப்பிடலாம். அதுவும் அளவாக சாப்பிட வேண்டும். குறிப்பாக பன்னீரை சாப்பிட சிறந்த நேரம் என்றால், அது இரவு வேளை தான். அதுவும் தூங்குவதற்கு ஒரு மணிநேரத்திற்கு முன்னரே சாப்பிட வேண்டும். தினமும் பன்னீரை சாப்பிட விரும்பினால், ஒரு நாளைக்கு 60 கிராமிற்கு மேல் சாப்பிடக்கூடாது.

💦பன்னீரை சமைக்கும் போது, அவற்றை குறைவான எண்ணெய் பயன்படுத்தியே சமைக்க வேண்டும். அதிகளவில் பன்னீரை உட்கொண்டால், உடலில் கொலஸ்ட்ரால் அதிரித்துவிடும், உடல் பருமனாகும் மற்றும் உடலில் சோடியத்தின் அளவு அதிகரித்து நீர் தேங்க ஆர்ம்பித்துவிடும். முக்கியமாக லாக்டோஸ் சகிப்புத்தன்மை கொண்டவர்கள் பன்னீரை உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.

சர்க்கரை நோயாளிகள் பன்னீர் சாப்பிடலாமா

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்