சரும சுருக்கம் நீங்க

சரும சுருக்கம் நீங்க

சரும சுருக்கம் நீங்க

💐💐ஒரு குறிப்பிட்ட வயதை அடைந்தவுடன் முக சுருக்கம் ஏற்படுவது வழக்கம். அதனை மறைக்கவோ அல்லது தடுக்கவோ பயன்படுத்தும் இரசாயன க்ரீம்கள் தற்காலிக தீர்வுகளை தந்தாலும், பாரிய விளைவுகளையும் ஏற்படுத்தும். எனவே, ஆரம்ப நிலையிலேயே சருமத்தை கவனித்துக்கொள்வதன் மூலம் வயதான அறிகுறிகளை தடுக்கலாம்.

💐💐தோல் சுருக்கம், நெற்றியில் சுருக்கங்கள், கண்களுக்குக் கீழே கரும்புள்ளிகள் போன்றவை வயதானதன அறிகுறிகளாக பார்க்கப்படுகின்றது.

முக சுருக்க பிரச்சினை

💐💐சூரிய ஒளியில் நீண்ட நேரம் இருந்தால்இ உங்கள் சருமம் விரைவில் சுருக்கம் அடைய வாய்ப்புள்ளது.மேலும்இ ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கம் மற்றும் புகைபிடிக்கும் பழக்கம் ஆகியவையும் சுருக்கங்களை ஏற்படுத்தும். எனவே, இயற்கையான முறையில் சுருக்கம் ஏற்படுவதை எவ்வாறு தடுக்கலாம் என பார்ப்போம்.

  1. தேங்காய் எண்ணெய்யானது, இயற்கையிலேயே சருமத்தை பாதுகாப்பாகவும் ஈரப்பதமாகவும் வைக்கின்றது. இது சருமத்தில் கொலாஜனை உற்பத்தி செய்து சருமத்தை மென்மையாக வைத்திருக்கும்
  2. முகம் சுருக்கம் நீங்க ஐஸ் கட்டிகளைக் கொண்டு தினமும் 10 நிமிடம் மசாஜ் செய்தால், சரும செல்கள் குளிர்ச்சியடைவதோடு, முகத்தில் தோன்றும் மேடு பள்ளங்கள் மற்றும் முகம் சுருக்கம் நீங்க ஆரம்பிக்கும்.
  3. தயிரை முகத்தில் தடவி மசாஜ் செய்து, 20 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். இதனால் சருமத்துளைகளில் உள்ள அழுக்குகள் முழுமையாக வெளியேறுவதோடு, சருமத்துளைகளும் சுருங்கும்.
  4. முட்டையின் வெள்ளைக்கருவை ஒரு பௌலில் எடுத்து கொள்ளவும். அதனுடன் சிறிதளவு எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து கொள்ளவும். பின்பு முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைக்கவும், பின்பு முகத்தை கழுவ சருமத்தில் உள்ள அழுக்குகள் முழுமையாக வெளியேற்றப்படும்.
  5. வெள்ளரி, பீட்ரூட், கேரட், உருளைக்கிழங்கு போன்றவற்றை தனித்தனியாகவோ அல்லது சேர்த்தோ பன்னீர் விட்டு அரைக்கவும். தினமும் ஓய்வு கிடைக்கும் போது முகத்தில் இருக்கும் அழுக்கை நீக்கி பிறகு ஃபேஸ் பேக் போட்டு அரைமணி நேரம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவுங்கள். ஒரு வாரத்தில் முகத்தில் இருக்கும் கோடு, சுருக்கம் மறைவதைப் பார்க்கலாம்.
  6. பாசிப்பருப்பு மாவு, கடலை மாவு, தரமான சந்தனப்பொடி, ரோஜா இதழ்கள் போன்ற ஃபேக்குகளும் சருமத்தை சுருக்கங்களிலிருந்து காப்பாற்றும்.
  7. ஒரு பௌலில் சிறிது பேக்கிங் சோடா சேர்த்து தண்ணீர் ஊற்றி பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி 10 நிமிடம் உலர வைத்து பின் கழுவ வேண்டும். இதனால் சருமத்தின் நிறம் அதிகரிப்பதோடு, சருமத் துளைகளும் சுருங்கும்.
  8. கேரட் சாறுடன் சிறிதளவு கடலை மாவும் கலந்து பேஸ்ட் போன்று குழைத்து அதனை முகத்தில் பூசி சிறிது நேரத்தில் கழுவ வேண்டும். இவ்வாறு செய்து வந்தால் முகசுருக்கம் நீங்கும்.
  9. பசும் மஞ்சளை அரைத்து பாசிப்பயறு மாவுடன் சேர்த்து தினமும் உடலில் பூசி பின்னர் குளித்தால் தோல் சுருக்கம் நீங்கி இளமையுடன் வாழலாம்.
  10. ஆப்பிள் சீடர் வினிகர் சிறிது நீரில் கலந்து முகத்தில் தடவி, 10 நிமிடம் கழித்து கழுவ வேண்டும். இதனால் சருமத்தின் பொலிவும் மேம்படும்.

சரும சுருக்கம் நீங்க

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்