சம்மாந்துறை பொலிஸ் நிலைய உப பொலிஸ் பரிசோதகர் கே.சதீஸ்கருக்கு பிரியாவிடை

-சம்மாந்துறை நிருபர்-

சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் கடந்த 6 வருடங்களாக கடமையாற்றிய துறைநீலாவணைப் பகுதியைச் சேர்ந்த உப பொலிஸ் பரிசோதகர் கே. சதீஸ்கரின் இடமாற்றத்தை முன்னிட்டு பிரியாவிடை நிகழ்வு நேற்று புதன்கிழமை சம்மாந்துறை பொலிஸ் நிலைய வளாகத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.டி.எஸ். ஜெயலத் சம்மாந்துறை பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள் நண்பர்கள் என பலரும் கலந்து கொண்டு நினைவுப் பரிசுப் பொருட்களை வழங்கி கௌரவித்தனர்.

குறித்த உப பொலிஸ் பரிசோதகரது சேவைக்காலத்தில் பொது மக்கள் மற்றும் பொலிஸாருக்கும் இடையில் உறவு காணப்பட்டதுடன் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் கொள்ளை மற்றும் திருட்டுச் சம்பவங்கள் ஆகியவற்றை முறியடித்த ஒரு திறமை வாய்ந்த அதிகாரி ஆவார்.

மேலும் கடந்த காலங்களில் சம்மாந்துறை பகுதியில் திருடப்பட்ட மோட்டார் சைக்கிள் தங்க நகைகள் போதைப் பொருட்கள் உள்ளிட்ட சம்பவங்களில் புலனாய்வு மற்றும் விசாரணை மேற்கொண்டு மக்களின் நன்மதிப்பினை பெற்றதுடன் ஊடகங்களுடன் சுமூகமான உறவினை வைத்திருந்த ஒரு சிறந்த அதிகாரி என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

  • Beta

Beta feature

  • Beta

Beta feature

  • Beta

Beta feature