
சம்மாந்துறை தொழில்நுட்ப கல்லூரியில் மீண்டும் யானைகள் அட்டகாசம்
சம்மாந்துறை தொழில்நுட்ப கல்லூரியில் மீண்டும் யானைகள் அட்டகாசம்
தொழில்நுட்ப கல்வி பயிற்சி திணைக்களத்தின் கீழ் இயங்கும் சம்மாந்துறை தொழில்நுட்ப கல்லூரியில் யானைகள் நேற்று ஞாயிற்றுக்கிழமை நண்பகல் உட்புகுந்து மதில்கள் பாதுகாப்பு வேலிகள் அனைத்தையும் உடைத்ததுடன் விவசாய பகுதி மாணவர்களினால் செய்கை பண்ணபட்டிருந்த பயிர்களுக்கும் பாரிய சேதம் விளைவித்திருக்கின்றது.
இதில் கரும்பு, வாழை, சீயோத்ரே புற்கள், சுகர் கிராஸ் புற்கள் மற்றும் பயிர்கள் போன்றவற்றிக்கு பாரிய சேதத்தை உண்டு பண்ணியிருக்கின்றது. இந்த யானைகள் கடந்த வாரமும் உட்புகுந்து பாரிய சேதத்தை விளைவித்திருந்த நிலையில் இது இரண்டாவது தடவையாகும்.
எனவே, இது தொடருமாக இருந்தால் இங்கு எந்தவித நடவடிக்கைகளையும் மேற்கொள்ள முடியாது, அத்துடன் விவசாய லிடயங்களிலும் மாணவர்கள் ஈடுபட முடியாத நிலை காணப்படுகிறது.
எனவே, வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் உடனடியாக இவ்விடத்தில் இதற்கான தீர்வு ஒன்றை மேற்கொள்ள வேண்டும், ஏனெனில் இப்பகுதியில் யானைகளின் நடமாட்டம் அதிகமாக இருக்கிறது.
வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் பேருக்கு இல்லாமல் தமது கடமைகளை சரிவர செய்ய வேண்டும், எனவே இதற்கு வனஜீவராசிகள் திணைக்கள பணிப்பாளர் நாயகம் மற்றும் அதற்கு பொறுப்பான அமைச்சர் ஆகியோர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாய டிப்ளோமா மாணவர் சங்க தலைவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.






