
சமோசாவில் ஆணுறை : பிரபல நிறுவனத்திற்கு வந்த சிக்கல்
இந்தியா மகாராஷ்டிரா மாநிலம் புனே பிம்ப்ரி சின்ச்வாட்டில் உள்ள ஒரு ஓட்டோமொபைல் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட சமோசாக்களில் ஆணுறைகள் குட்கா மற்றும் கற்கள் கிடந்துள்ளது.
இது தொடர்பாக ஐந்து பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
வழக்குப்பதிவு செய்யப்பட்டவர்களில் இரண்டு பேர் சமோசாக்களை வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்ட ஒரு துணை ஒப்பந்த நிறுவனத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் எனவும், மற்ற மூவர் இதேபோன்ற புகாருக்குள்ளாகி தகுதிநீக்கம் செய்யப்பட்ட மற்றொரு நிறுவனத்தை சேர்ந்தவர்கள், எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
