
சமுர்த்தி திட்டத்தின் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பான விசேட வேலைத்திட்டம்
– ஏ.எச்.ஏ. ஹுஸைன்-
சமுர்த்தி திட்டத்தின் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பான விஷேட வேலைத்திட்டம் தொடர்பான நிகழ்வு மட்டக்களப்பு மண்முனை வடக்கு டேபா மண்டபத்தில் மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் எஸ். புவனேந்திரன் தலைமையில் இன்று சனிக்கிழமை இடம்பெற்றது
சமுர்த்தியுடன் ஒரு வாரம் எனும் நிகழ்ச்சித் திட்டத்தை அறிமுகம் செய்தல், அஸ்வசும திட்டத்துடன் இணைந்து சமுர்த்தி திட்டத்தை நடாத்திச் செல்லல், மனப்பாங்கு மாற்றம், கடன் திட்டங்கள், சமுர்த்தி வங்கிகளை மேம்படுத்துதல் போன்ற விடயங்கள் குறித்து இதன்போது விளக்கமளிக்கப்பட்டன
அத்துடன் மக்கள் மத்தியில் சமுர்த்தி விழிப்பூட்டல் நடவடிக்கைகள் , வங்கிகளின் எதிர்கால நடவடிக்கைகள், வலய மட்ட வேலைத்திட்டம், தகவல் தொழில்நுட்ப நிகழ்ச்சித்திட்டம், விளையாட்டு நிகழ்வுகள், முதியோர், வலது குறைந்தோர், சிறுநீரக நோயாளிகள் மற்றும் கர்ப்பிணித் தாய்மார்களுக்கான கொடுப்பனவுகள் என்பன தொடர்பாகவும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.
இந்நிகழ்வில் மன்னார் மாவட்ட சமுர்த்திப் பணிப்பாளர் அலியார், சமுர்த்தி அபிவிருத்தி திணைக்கள குறு நிதியத்திற்கு பொறுப்பான பிரதிப் பணிப்பாளர் விக்கிரமசிங்க,உள்ளிட்ட சமுர்த்தி முகாமையாளர்கள், சமூக அபிவிருத்தி உதவியாளர்கள், மகா சங்க தலைவர்கள், வங்கிச் சங்கத் தலைவர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.





