“சமுதாயத்தின் சவால்களை வெல்வோம்” – மாணவர்களுக்கான நாடகச் செயற்பாட்டு விழிப்புணர்வு நிகழ்வு
-கிண்ணியா நிருபர்-
தம்பலகாமம் பிரதேச செயலாளர் ஜெ. ஸ்ரீபதி அவர்களின் வழிகாட்டலுக்கு அமைய தம்பலகாமம் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட க/கல்மெட்டியாவ வித்தியால மாணவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்வு நாடகச்செயற்பாட்டின் அனுகுமுறையுடன் நடைபெற்ற நிகழ்வின் வளவாளராக தம்பலகாமம் பிரதேச செயலக சமுதாய சீர்திருத்த அபிவிருத்தி உத்தியோகத்தர் பா.ஹம்சபாலன் அவர்களால் நடாத்தப்பட்டது.
குறித்த நிகழ்வில் பாடசாலை அதிபர், ஆசிரியர்,சமுதாய சீர்திருத்த அபிவிருத்தி உத்தியோகத்தர் பா.ஹம்சபாலன், கல்மெடியாவ வடக்கு கிராம சேவகர் பிரிவின் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் அனஸ் மற்றும் மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.



