சனி பகவான் பற்றிய அரிய தகவல்

திருவண்ணாமலையில் வாழ்ந்த ஒரு சித்த மகாபுருஷர் சொன்ன பரிகாரமுறை இது.

நீங்கள் எத்தனை கோடி, கொடுத்தாலும் இதை போன்ற அரியதகவல்கள், நீங்கள் அறிய விதி இருந்தால் மட்டுமே நடக்கும். தெரிந்து கொண்டால் மட்டும் போதுமா? அதை நடைமுறைப்படுத்த உங்களுக்கு ஜாதக அமைப்பு இருக்க வேண்டும். ஆனால் ஒன்று மட்டும் சர்வநிச்சயம். இதை தவறாது செய்து முடித்தால், உங்களுக்கு அந்த சனிபகவான் முழு அருள் கடாட்சம் வழங்கி, உங்களுக்கு தலைமைஸ்தானம் கிடைப்பது உறுதி.

அப்படிப்பட்ட , ஒரு தேவரகசியம் போன்ற தகவலை, நமது வாசக அன்பர்களிடம் பகிர்ந்து கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி

தினமும் உலர்திராட்சை (சர்க்கரைப் பொங்கல் வைக்க உபயோகிக்கிறோமே ) ஒருகைப் பிடி அளவுக்கு காலையில் காகத்திற்கு அளிக்க வேண்டும்.

உயிரே போக வேண்டும் என்று விதி இருந்தாலும் , அதையே மாற்றக்கூடிய சக்தி இதற்கு உண்டு என்கிறார்.

இதை தவிர வன்னி மர விநாயகருக்கு பச்சரிசிமாவு படித்தாலும், சனிக்கிழமைகளில் விரதம் இருந்தபடி எள் கலந்த தயிர்சாதம் படைத்தாலும், ஒரு மிகப் பெரிய கவசம் போல் பாதுகாக்கும்.

காகத்திற்கு தினமும் காலையில் சாதம் வைக்கும் போது உங்களுக்குள் ஏற்படும் உணர்வா இல்லை நிஜமாகவே பித்ருக்களின் ஆசியா, தெரியவில்லை!. ஆனால், உங்கள் வாழ்வில் திடீரென்று நடக்கும் அசம்பாவிதங்கள், விபத்துக்கள், வீண் பழி போன்றவை உங்கள் கிட்டவே நெருங்காது.செய்வினை கோளாறுகள் உங்கள் வீட்டுப் பக்கமே வராது. தீராத கடன் தொல்லைக ள், புத்திரசந்தான பாக்கியம் போன்ற மிக முக்கி யமான பலன்களையும், உங்கள் நியாயமான அபிலாஷைகளையும் தங்கு தடையின்றி நிறைவேற்றுவதில் மிக முக் கிய பங்கு வகிப்ப து , உங்கள் முன்னோர் வழிபாடுதான்.

உங்கள் முன்னோர்களுக்கே, நீங்கள் உணவிடும் புண்ணியம் என்கிற அபரிமிதமான சக்தியை உங்களுக்கு அளிக்கவல்ல , அற்புதமான ஜீவ ராசி காக்கை இனம்.

குடும்ப ஒற்றுமை வேண்டும் என்று நினைக்கு ம் சுமங்கலிபெண்கள் காக்கைகளை வழிபடுவது வழக்கம்.

தன் உடன்பிறந்தவர்கள்ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்க, தங்களிடம் பாசம் உள்ளவர்களாகத்திகழ இந்த காணுப் பிடி பூஜையைச் செய்கிறார்கள்.

திறந்தவெளியில்தரையைத்தூய்மையாகமெழுகிக் கோலமிடுவார்கள். அங்கே வாழை இலையைப்பரப்பி அதில் வண்ண வண்ண சித்ரான்னங்களை ஐந்து, ஏழு, ஒன்பது என்ற கணக்கில் கைப்பிடி அளவு எடுத்து வைத்து,.காக்கைகளை “கா.. கா’ என்று குரல் கொடுத்து அழைப்பார்கள்.

அவர்களின் அழைப்பினை ஏற்று காக்கைக ளும் பறந்துவரும். அங்கு வந்த காக்கைகள் தன் சகாக்களையும் அழைக்கும். வாழை இலையில் உள்ள அன்னங்களைச்சுவைக்கும்.
அப்படிச்சுவைக்கும்போதுஅந்தக்காக்கைகள் “கா… கா…’’ என்று கூவி தன்கூட்டத்தி னரை அடிக்கடி அழைக்கும்.

அந்தக்காக்கைகள் உணவினை சாப்பிட்டுச் சென்றதும், அந்தவாழை இலையில் பொரி, பொட்டுக்கடலை, வாழைப்பழங்கள், வெற்றி லைப்பாக்கு வைத்து தேங்காய் உடைத்து வழிபடுவார்கள். இதனால் உடன்பிறந்த சகோதரர்களுடன் ஒற்றுமை நிலவும் என்பது பெண்களின் நம்பிக்கை.

இந்த வழிபாட்டில் வயதான ஆண்களும் கலந்து கொள்வார்கள். மறைந்த முன்னோர்கள் (பித்ருக்கள்) காக்கை வடிவில் வந்து வழி பாட்டில் கலந்து கொள்வதாக பெரியவர்கள் சொல்வர். இதனால் பித்ருக்களின் ஆசிகிட்டும் என்பது நம்பிக்கை.

மேலும் காக்கைகளை அன்று வழிபடுவதால் சனி பகவானைத் திருப்திப் படுத்தியதாகவும் கருதுகிறார்கள்.
காக்கை சனிபகவான் வாகனம். காக்கைக்கு உணவு அளிப்பது சனிக்கு மகிழ்ச்சி தருமாம். காக்கைகளில் நூபூரம் பரிமளம், மணிகாக்கை அண்டங்காக்கை என சிலவகைகள் உண்டு.

காக்கையிடம் உள்ள தந்திரம் வேறு எந்தப் பறவைகளிடமும் காணமுடியாது. எமதர்ம ரா ஜன் காக்கை வடிவம் ஏடுத்து மனிதர்க ள் வாழுமிடம் சென்று அவர்களின் நிலையை அறிவாராம். அதனால் காக்கைக்கு உணவு அளித்தால் எமன் மகிழ்வாராம். எமனும் சனியும் சகோதரர்கள் ஆவர். அதனால், காக்கைக்கு உணவிடு வதால் ஓரே சமயத்தில் எமனும் சனியும் திருப்தியடைவதாகக் கருதப்படுகிறது.

காலையில் நாம் எழுவதற்கு முன், காக்கையி ன் சத்தம் கேட்டால் நினைத்த காரியம் வெற்றி பெறும். நமக்கு அருகில் அல்லது வீட்டின் வாசலை நோக்கிக் கரைந்தால் நல்ல பலன் உண்டு. வீடு தேடி காகங்கள்.வந்து கரைந்தால அதற்கு உடனே உணவிடவேண்டும்.

எனவே, காக்கை வழிபாடு செய்வதால் சனி பகவான், எமன் மற்றும் முன்னோர்களின் ஆசீர்வாதத்தினைப் பெற்று மகிழ்வுடன் வாழலாம்.