சனிக்கோளின் தென் துருவத்தை சுற்றி, ஒரு பாரிய 10 பக்க வளிமண்டல வடிவமைப்பு (decagon) தோன்றியுள்ளதாக நாசா விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
இது சனிக்கோளின் பிரபலமான வடதுருவ அறுகோண (hexagon) வடிவத்திற்கு ஒரு ஆச்சரியமான இணையாக அமைந்துள்ளது.
ஹப்பிள் தொலைநோக்கி தரவுகள், இந்த விநோதமான 10 பக்க வடிவம் தென் துருவத்தில் மட்டும் தோன்றுவதாக தெரிவிக்கின்றன.
இதற்கான காரணம் இன்னும் முழுமையாக விளக்கப்படவில்லை.
வளிமண்டல ஜெட் ஸ்ட்ரீம்களால் ஏற்படும் இயற்கை வடிவங்கள் என விஞ்ஞானிகள் ஆரம்ப அனுமானம் தெரிவித்தாலும், வட-தென் துருவங்களில் வெவ்வேறு வடிவங்கள் ஏன் உருவாகின்றன என்பது இன்னும் ஆய்வில் உள்ளது.










