சனல் 4இன் காணொளி ராஜபக்சவின் பாரம்பரியத்தை கருமையாக்கும் நோக்கில் உருவாக்கப்பட்டது

சனல் 4 இன் இந்த சமீபத்திய காணொளி 2005 ஆம் ஆண்டு முதல் ராஜபக்சவின் பாரம்பரியத்தை கருமையாக்கும் நோக்கில் ராஜபக்சவுக்கு எதிரான ஒரு பிரச்சாரமாகும் என முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அறிக்கை ஒன்றை வெளியிட்டு அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இதே சனல் ஒளிபரப்பிய முந்தைய படங்களைப் போலவே இதுவும் பொய்கள் என அவர் வெளியிட்டுள்ள  அறிக்கையில் மேலும்  தெரிவித்துள்ளார்.