
சந்தேகத்திடமான முறையில் மீட்கப்பட்ட சடலம்
மஹாஓயா தம்பதெனிய பிரதேசத்தில் காணி ஒன்றில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த நபரொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
தேக்கவத்தை பகுதியைச் சேர்ந்த 46 வயதுடையவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மரணம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மஹாஓயா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
