
சந்திரிக்காவிற்கு பிரதமர் பதவி?
முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க தலைமையில் புதிய கூட்டணி ஒன்று தற்போது உருவாகியுள்ளது.
இந்த புதிய கூட்டணி அதிபர் ரணில் விக்ரமசிங்கவை மீண்டும் நியமிப்பதற்கு ஆதரவளிக்கும் எனவும் மேலும் ரணில் விக்ரமசிங்கவை மீண்டும் அதிபராக நியமித்து முன்னாள் அதிபர் சந்திரிக்காவை பிரதமராக நியமிக்க முன்மொழியப்பட்டுள்ளதாகவும் அறியமுடிகிறது.
எனினும், எதிர்வரும் அதிபர் தேர்தலில் எந்தவொரு அதிபர் வேட்பாளரையும் ஆதரிப்பது தொடர்பில் தாம் இதுவரையில் உறுதியான தீர்மானத்தை எடுக்கவில்லை என சிறி லங்கா சுதந்திரக் கட்சி அறிவித்துள்ளது.
