சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்டவர்கள் கைது

கிளிநொச்சி பரந்தன் பூநகரி வீதியில் செருக்கன் பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுப்பட்டிருந்த இரண்டு ரிப்பர்களுடன் சந்தேக நபர்களை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

சட்டவிரோத மணல் அகழ்வு இடம்பெறுவது தொடர்பில் பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய சம்பவ இடத்திற்கு விரைந்த கிளிநொச்சி பொலிஸார் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுப்பட்டவர்களையும் இரண்டு ரிப்பர்களையும் கைப்பற்றியுள்ளனர்.