சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டுகொண்டிருந்த 12 பேர் கைது

-மன்னார் நிருபர்-

சிலாவத்துறை – கொண்டச்சிக்குடா கடல் பகுதியில் நேற்று புதன்கிழமை அதிகாலை சட்டவிரோதமாக கடலட்டைகள் பிடிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கல்பிட்டி, சிலாவத்துறை, வங்காலை மற்றும் மன்னார் ஆகிய பகுதிகளில் வசிக்கும் 23 முதல் 48 வயதுக்கு உட்பட்டவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடற்படையினரால் குறித்த கடல் பகுதியில் முன்னெடுத்த விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது இவ்வாறு சட்டவிரோதமாக கடலட்டைகள் பிடித்து கொண்டிருந்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் இதன்போது 4 டிங்கி படகுகள், 1670 கடலட்டைகள் மற்றும் உபகரணங்கள் கைப்பற்றப்பட்டன.

கைது செய்யப்பட்ட 12 பேர், கடலட்டைகள் மற்றும் கைப்பற்றப்பட்ட பொருட்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக சிலாவத்துறை கடற்றொழில் பரிசோதகரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டுகொண்டிருந்த 12 பேர் கைது

சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டுகொண்டிருந்த 12 பேர் கைது

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்