சட்டவிரோதமாக வேப்பமர குற்றிகளை ஏற்றிச் சென்றவர் கைது

-யாழ் நிருபர்-

அனுமதிப்பத்திரம் இன்றி சட்டவிரோதமாக வேப்பமரக் குற்றிகளை ஏற்றிச் சென்றவர் நேற்று வியாழக்கிழமை இரவு, கைதடி பகுதியில் வைத்து சாவகச்சேரி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது இவரிடம் இருந்து 9 வேப்பமரக் குற்றிகள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொலிஸ் அதிகாரி பொ.ப.ஜெயரூபன் தலைமையிலான குழுவினரால் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

மேலதிக விசாரணைகளை மேற்கொண்ட பின்னர், அவரை சாவகச்சேரி நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்