சட்டவிரோதமாக மண் கடத்தி வந்த டிப்பர் மீது பொலிஸார் துப்பாக்கி பிரயோகம்

-யாழ் நிருபர்-

முல்லைத்தீவு- ஒட்டுசுட்டான்  கற்சிலைமடு பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை சட்டவிரேதமாக மணல் ஏற்றிச்சென்ற டிப்பர் வாகனமொன்றை பொலிஸார் துப்பாக்கிச்சூடு நடாத்தி பிடித்தனர்.

பொலிஸாரும்,  விசேட அதிரடிப்படையினரும் இணைந்து நடாத்திய விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது,  சட்டவிரோத மணல் ஏற்றிய டிப்பர் அந்த வீதியால் வந்துள்ளது.

பொலிஸார் குறித்த டிப்பரை வழிமறித்த போதும்,  நிற்காமல் தப்பிச் சென்றது.

இதனையடுத்து, வாகனமொன்றால் வழிமறித்து, டயரை நோக்கி துப்பாக்கிச்சூடு நடாத்தி, வாகனத்தை நிறுத்திய பொலிஸார் சாரதியை கைது செய்துள்ளனர்.