சட்டவிரோத போதைப்பொருள் கடத்தல் மூலம் சொத்துக்கள் மற்றும் உடைமைகளை சட்டவிரோதமாக கையகப்படுத்தியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பான விசாரணையில் 76 வயதான சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவினரால் நேற்று வெள்ளிக்கிழமை குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொரலஸ்கமுவ பகுதியைச் சேர்ந்தவரான குறித்த சந்தேக நபரின் பெயரில் கம்பஹா பகுதியில் அமைந்துள்ள சொகுசு வீடமைப்புத் தொகுதியில் சுமார் 3 கோடி ரூபாய் பெறுமதியான வீடொன்று பதிவு செய்யப்பட்டுள்ளதாக மேலதிக விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சொத்து சட்டவிரோத போதைப்பொருள் கடத்தல் மூலம் பெறப்பட்டதா என்பது உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகம் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகிறது.










